தருமராஜ் வந்தார்..

தருமராஜின் அயோத்திதாசர் புத்தக வெளியீட்டு விழா சில குறிப்புகள்


அயோத்திதாசர் புத்தகம் வெளியீட்டு விழாவின் அழைப்பிதழைப் பார்த்தவுடன் குழப்பமாக இருந்தது. விழா விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களின் தேர்வு குறித்த குழப்பமே அது. ஆனால் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அயோத்திதாசர் குறித்து எந்த திசையிலிருந்து பேசுவார்கள் என்று யோசித்ததும் கொஞ்சம் துலங்கத் துவங்கியது.  இந்த மூவரும் பொருத்தமான தேர்வு என்றும் தோன்றியது.

இருந்தாலும் புனைவெழுத்தாளர்கள் மட்டும்  ஏன் என்ற கேள்வி நீங்காமல் இல்லை. அதற்கும் விடை கிடைத்தது.

விழாவில் பேசிய –  சமஸ், ஜெமோ, சுவெ –  மூவரிலும் தருமராஜின் புத்தகம் அவர்களை எவ்வாறு பாதித்தது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதைத் தாண்டி அவர்கள் பேசியது இந்நிகழ்வையே ஒரு புனைவாக்கியது . மூவருக்கும் அயோத்திதாசர் எனும் ஓரே நபர் இந்துத்துவ எதிர்ப்பாக, பகுத்தறிவிற்கு எதிர்ப்பாக, நவீனத்துவக்கு எதிர்ப்பாக என மாறிய அதிசயம் நிகழ்ந்தது.


இறுதியில் பேசிய தருமராஜுக்கு வேறு வழியே இல்லை. அவர் உண்மையைப் பேசித்தான் ஆக வேண்டும். ஏனெனில் அவர் இங்குள்ள உண்மைகள் பற்றித் தெரியாத ஒரு வேற்று நூற்றாண்டு ஏலியன் ஒருவருடன் இருபது வருடம் வாழ்ந்திருக்கிறார்.

அவருடைய பேச்சிலே மூவரின் நிலைப்பாட்டிற்கான துணைகேள்விகள் வந்து கொண்டேயிருந்தன.

ராஜ்கௌதமன் ‘குறுகிய ஐரோப்பிய’ பார்வை கொண்டு செய்த தவறை, தருமராஜ் செய்யவில்லை என்று வழக்கம்போல ஐரோப்பிய பிரச்சனையாக்கி  ஜெமோ சொன்னார். தருமராஜ் தனது பேச்சின் ஊடே, தான் எவ்வாறு தெரிதா, விட்கென்ஸ்டைன், தெல்யூஸ் போன்ற ‘இந்தியப் பார்வைகள்’ கொண்டு அயோத்திதாசரைக் கண்டடைந்தேன் என்றார்.

நாம் என்ன ஆசைப்பட்டா ஐரோப்பிய பார்வைகளுக்குத் தேடிப் போகிறோம். இங்கு முப்பது வருடமாகக் கூடவே இருக்கிற  இளையராஜாவைப் புரிந்து கொள்ள Charles Rosen தயவில்லாமல் முடியவே முடியாது போல இருக்கிறது. இல்லையென்றால் இங்கே நூறு புத்தகங்கள் வந்திருக்க வேண்டுமே. நமக்கு வேறு வழி இல்லை என்பதால் தானே மேற்கினை நோக்கிச் செல்ல வேண்டி இருக்கிறது.  ஏன் வேறு வழி இல்லை என்ற கேள்வியும், பொருத்தமான ஐரோப்பிய பார்வைகளைத் தேர்வு செய்வதும், அப்பார்வைகள் தரமுடியாத நமது ‘லட்சணத்தை’ நாம் பேசுவதும் நம்முடைய கையில்.

போலவே சமஸ்கிருதத்துக்கு எதிராக அயோத்திதாசர் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்ற சு.வெ கேள்விக்கு..தமிழையும் சமஸ்கிருதத்தையும் சகோதர மொழிகளாகத் திருப்பியிருப்பார் என்று ஒரு பதில் வந்தது.

நவீனத்தின் பார்வைக்கு அயோத்திதாசர் கொஞ்சம் கெட்டவராகத் தெரிகிறார் என்ற சமஸின் காரணத்திற்கு,  இவ்வாறு நாம் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வியில் எத்தனை பேரை, முக்கியமானவற்றை இழந்துவிட்டோம், இழக்கப் போகிறோம் என்ற ஆற்றாமை பதிலாக வந்தது.


அயோத்திதாசரின் மெய் குறித்த விளக்கமாக தருமராஜ் சொன்ன சப்தமில்லாத மெய், தமிழுக்கு புதிய திறப்புதான் என்று நினைக்கிறேன்.

நேர்மாறாக நமது உயிரெழுத்துக்கள் சப்த வடிவானவை. அதுவும் இசைச்சுர அமைப்பிலானவை. இது போன்ற அணுகுமுறை எகிப்திய, கிரேக்க இசைமுறைகளிலும் உள்ளது. தமிழ் உயிரெழுத்துக்களை இன்றைய பியானோ கட்டைகளில் அடுக்கிவிட முடியும் (அதனால் இரண்டும் ஒன்று என்பதல்ல).

இவை தமிழில் மட்டும்தான் இப்படி என்பதைவிட அவர் சொன்னதைப் போல வேறெந்த மொழியையும் விட தனது வழி வழியான தொடர்ச்சியினால் இம்மொழியில் இந்த ஆழத்திற்கு நாம் செல்லமுடிகிறது.

தனது புத்தகத்தை பல காரணங்களினால் அவர் இளையராஜாவிற்கு சமர்ப்பித்திருக்கலாம்.  சிலவற்றை புத்தகமாக எழுதியுள்ளார். (அதையும் அவர் புத்தகமாக வெளியிட வேண்டும்.தமிழில் இளையராஜா பற்றி புத்தகங்களே இல்லை!!..பிரேமின் ஒன்றுதான் இருக்கிறது) ஆனால் இவற்றைத்தாண்டி தாசரும், ராஜாவும் சேரும் -உயிர், மெய் – அருமையான புள்ளி இது.


தாசரும் ராஜாவும் சேரும் மற்றொரு புள்ளி இருவரும் ஏலியன்கள்.

தருமராஜின் உரையில் கேட்டது மிகப்பொருத்தமானது – “இப்படிப்பட்ட  ஒருவர் வரலாற்றிலிருந்து   வந்தால் நாம் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி – நீங்க நல்லவரா கெட்டவரா”. ஆனால் இது வரலாற்றிலிருந்து வந்தவருக்கு மட்டுமா.. நிகழ்காலத்திலும் நடப்பது..நடக்கப்போவது.

கர்னாடக இசை தமிழிசை இல்லயாமே என்ற போது அவர் சிரித்துக்கொண்டே ‘தானா வந்த சந்தனமே’ என்றார். தியாகராஜர் கடவுள் மாதிரி என்ற போது ‘அதனால தான் அவர் ஆசிர்வாதம் பண்ணி பாட்டு கொடுத்தார்’ என்று தியாகராஜரின் பாடல்வரிகளை வேறு மெட்டில் அமைத்தார். கர்னாடக சீசனைத் திறந்து வைத்து ‘நான் folk musicஐ classicalஆ கொடுப்பவானக்கும்’ என்றார். ஒவ்வொன்றும் நமது கால உண்மைகளை உரசிப்பார்க்கும் கூற்றுகள்தான்.

ஆனால் எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்ல மாட்டேன் என்று இவரும், நேரடியாக சொன்னாலே குழப்பும் அவர்களும் சேர்ந்து இவர் திமிர் பிடித்த மோசமானவராகி, அவர்கள் ‘அறிவிருக்கா’ ஆகி ..

இதிலும் பொருத்தம் தான். என்ன இவரை மறந்துவிடதான் இனி முடியாது. திரைஊடகம் காப்பாற்றி விட்டது.


பேச்சின் நடுவே அவர் ‘நல்லவேளை அ.தாசருக்கு பெரிசா தகவல்கள்’ இல்லை என்று ஆசுவாசப்பட்டார். ஆனால் இப்படிச் சொல்லும் ஒருவரிடம் புனைவெழுத்தாளர்கள் நாவல் எழுதச் சொன்னதாகச் சொன்னது திகிலான அனுபவம்.

புனைவெழுத்தாளர்கள் தங்களை அறிவியக்கமாக அறிவித்துவிட்டார்கள். தங்கள் கற்பனைக்கு எல்லை இல்லை என்று நிரூபிக்க சகலத்தையும் எழுதினார்கள். பிறகு எல்லாரையும் புனைவெழுத்தாளர்களாக மாற்றினால் தமிழ்நாட்டையே அறிவியக்கமாகி விடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அதில் ஒன்று  ‘நீங்க நாவல் எழுதலாமே’ என்று கேட்பது. இதை தருமராஜிடம் கேட்டதும் அவர் ‘அதமாதிரி தான் இதையும் எழுதுறேன்’ என்று சொன்னதும் திகிலான வேடிக்கைதான்.

ஆனால் புனைவெழுத்தாளர்களை ஏன் அழைத்தார் என்பது அந்த விழாவிலும், பிறகு அவர் பேசியதில் தான் தெரிகிறது. அந்த பக்கச் சிக்கல் இன்னும் மோசம் போலவே.


எனவேதான் தருமராஜின் வருகை நம்பிக்கையூட்டுவது.

தருமராஜிடமிருந்து கிடைக்கப் போகும் முறையியல் ( நன்றி @anathai) தமிழில் சிந்தித்தலுக்கு புதிய திறப்பாக இருக்கும் என்பதே எனக்கு தருமராஜ் வரவின் முக்கியத்துவம்.

இங்கே தெரிதா, சார்த்தர், விட்கென்ஸ்டைன்… மொழியியல், தத்துவம் பற்றி புத்தகங்கள் உள்ளன. அவர்களையெல்லாம் மேற்கோள் காட்டாமல் கட்டுரைகளும் இல்லை. ஆனால் பெரும்பாலும் அவை நினைவில்  நிற்பதில்லை. அதாவது உண்மையில் நம் சிந்தனையின் பகுதியாக மாறவில்லை. ஏனெனில் அதற்கான சரியான தேவையை, எங்கே எவ்வாறு பொருத்துவது என்ற அணுகுமுறையைக் கொண்டுவர இயலவில்லை. இந்த கட்டமைப்பு இல்லாமல்தான் தகவல்கள் நிரம்பி, ஆனால் இறுதியில் பெரிதாக ஒன்றும் மிஞ்சாத சூழல் நிலவுகிறது.    அயோத்திதாசர் புத்தகத்தின் வாயிலாக இந்த முறையியலே தமிழுக்கு எதிர்பார்ப்பது.

அயோத்திதாசரின் வரவு போலவே தருமராஜின் வரவுக்கு என்ன நேர்கிறது என்று பார்க்க வேண்டும்.



7 comments

  1. / ‘நல்லவேளை அ.தாசருக்கு பெரிசா தகவல்கள்’ இல்லை/

    If you don’t mind, can you expand on this.

    Background:
    1) Landed here after listening to your Raja movement podcast – which I find to be a delight.
    2) I’ve read Ayothidasar on and off and have hardly felt the kind of thrill of enlightenment many others seem to have experienced
    3) I’ve read Prof. T.D’s blog on and off and found his takes quite interesting. For instance, the Tirukkurungudi post you linked to in your previous blogpost. Regardless of whether one agrees his conclusions, or finds them reductive, he invariably provides a novel angle from which to look at something.
    4) So when JeMo introduced TD’s new book as one which is not a ‘Selections of Best Writings of Ayothidasar’ but T.D’s exposition on ‘how to read Ayothidasar’ it piqued my interest.
    5) The regard with which TD spoke about AyothidAsar in his speech kinda sealed the deal.

    But I struggled with the book . It is not it is a difficult read. TD writes beautifully.
    But I simply can’t get past the mode of asking ‘on what basis is he claiming so’?
    My margin notes were: “?”, “Eh?”, “How come?”, “Come on now..!”,”அடேங்கப்பா!”

    It became obvious something was not clicking and I gave up. Twice.

    I do understand that the very idea is to go beyond the extant நவீன நிரூபணவாத framework and provide an alternate narration etc. How does one dial out of expectation to see தகவல்கள் and be convinced of an arguments that stitches them together well? Why is it fortuitous (நல்லவேளை) that Ayodhidasar does not have recourse to facts?

    The tiruvaNNAmalai deepam alternate story that had all-speakers going ga-ga had me doing an eye-roll.
    Perhaps one may ask ‘hey you didn’t eye-roll for the original sthala-purANam did you?’. Is that the entire point then? Can’t one interpret anything as anything with earnest labour (or worse, even with cynical labour)? Or is it being claimed that ‘validity’ is just ‘a lot of history’ and nothing more.

    Is there simply a completely different way to open up to all this??

    Like

  2. Hello @dagalti

    உங்கள் வருகைக்கு நன்றி. Glad you liked the Raaja series!
    Will try to expand on my viewpoint around TD’s book.

    இளையராஜா தொடர்களில் (எழுத்திலும்/audioவிலும்) துவக்கப் பகுதிகளாக நான்கு ஐந்து பகுதிகள் இசைவரலாறு பற்றியே ஆரம்பிக்கிறேன். ராஜா குறித்து உண்மையில் எனக்கு குழப்பமாக இருந்தவற்றில் ஒப்பிட எளிதானது அவரது இசையின் இயக்கம் பற்றியவை. அதனை விளக்கும் counterpoint, harmony இத்தியாதிகளை மேற்கத்திய இசைச்சூழலில் ஒருவர் எளிதாக விளக்கிவிடுவார். அது இலக்கணம் தானே..சிக்கல் இலட்சணத்தில் அல்லவா.

    ராஜா குறித்து எனக்கிருந்த பெரிய குழப்பங்களில் மையமானது – இந்த ஆள் எந்த கிரகத்திலிருந்து இங்கு வந்தார் என்பதுதான். ராஜா மட்டுமல்ல அவரது இசையை சமூகம் உள்வாங்கியது குறித்தும் தான். complete random event மாதிரி தெரிந்த ஒன்றை அணுக வழி தெரியாமல் திரிந்ததை இப்போது நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

    ஏனென்றால ராஜாவின் இசை வரலாறு என்று அவரே சொல்வது போல பார்த்தால் – கேம்சந்திர பிரகாஷ் என்று ஒரு வரிசை வைத்திருப்பாரே- அது சினிமாவின் வரலாறோடு நின்று விடுகிறது. அதற்குப் பின்னால போனால கர்னாடக இசை வரலாறு ..அதன் மூலம் வேதகாலம் வரை போக முடியும். ஆனால் அந்த வரலாறு மற்றும் விளக்கங்கள் என் நிரூபணவாதத்துக்கு ஒத்து வரவில்லை. இசையின் divinity பற்றி மட்டுமே பேசும் இந்திய இசை வரலாற்றெழுத்தை வைத்து கொஞ்சதூரம் தான் போக முடியும்.

    இதில் பெரிய ஆதரவாக அமைந்தது மேற்கத்திய இசை வரலாற்று நூல்கள் மற்றும் அணுகுமுறைகள். ஆனால் அதே வேளையில் இந்திய இசை வரலாறு, மேற்கின் வரலாறு இரண்டு மட்டும் இருந்த போது ஏதோ ஒரு குறை இருந்தது இப்போது தெரிகிறது. அப்போது இத்தொடர் மாதிரியான ஒன்று தோன்றவேயில்லை.

    மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது – தமிழில் சிந்தித்தலும் தருமராஜின் எழுத்தும் கட்டுரையில் எழுதியது போல – தற்செயலாக தமிழிசை என்ற ஒன்றில் இடறி விழுந்தது தான். சேந்தன் திவாகரத்தில் “ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ” இவை ஏழிசைக்குரிய என்ற போது எல்லாம் தலைகீழானமாதிரி இருந்தது. தருமராஜ் திரும்பத் திரும்ப எழுதும் “ஞாபகம் மறதி” போன்ற ஒரு மனஓட்டம் கொஞ்ச நாள் இருந்தது.

    ஏனெனில் அதுவரை இசை ஒரு அன்னிய பிரதேசத்தினதாக இருந்தது. மேற்கிசை படித்தாலும் அது எங்கோ நிகழ்ந்ததுதானே. இந்திய மொழிகளில் சமஸ்கிருதமே ஒரு சப்த மொழி என்றே அறிஞர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழிசை குறிப்புகள் எல்லாவற்றையும் துலங்கச் செய்தது. அதன் பிறகே எழுதும் துணிச்சல் வந்தது.

    ஆனால் இந்நிகழ்வு மொழியை பற்றியும் வேறு விதமாக யோசிக்க வைத்தது. இதுனாள் வரை எனக்குத் தெரிந்த மொழியாக இது இல்லை. ஏனெனில் தமிழின் இலக்கண அமைப்பு இசை ஒலிகளின் அறிவையும் கொண்டு வசதியாக design செய்யப்பட்டிருக்கிறது.

    ஆனால் நல்லவேளையாக அதற்கு முன்னரே கிரேக்க இசை குறித்து படித்திருந்ததால், கிரேக்கத்திலும் இசை, கணிதம், வானயியல், மொழி இவையனைத்தும் பின்னிப்பிணைந்த ஒன்று என்று தெரிந்திருந்ததால், தமிழ் மட்டும்தான் விசேஷ மொழி என்று நினைக்கவில்லை. பண்டைய மொழிகள் அனைத்திலும் இவ்வாறான போக்கு இருக்கிறது போலும். இது மிகவும் யதார்த்தமானது தானே. ஒவ்வொரு துறைக்கான துறைமொழி என்று தோன்றும் வரை எல்லா அறிவுச் செயல்பாடிற்கும்
    பேசுமொழிதான் கருவி. எனவே பண்டைய மொழிகள் பலவகையான அறிவுத்துறைக்கு பயன்பட்டிருக்கும், பயன்பாட்டிற்கு வளைக்கப்பட்டிருக்கும். எனவே இப்போது தமிழ் எனக்கு சினிமாவின் நீலம், பச்சை, மஞ்சள் வயர் உள்ள டைம்பாம் மாதிரி காட்சியளிக்கிறது. இதில் எந்த வயர் எங்கே போகிறதோ.

    இவ்வகையிலான கருத்துக்கள் மங்கலாகத் துலங்கத்துவங்கும் போதுதான்.. மொழி என்பதே அறிவின் தொகுதி என்றும்.. ஒரு வாய்மொழிக்கதை குறிப்பாக 12 கிரகங்கள் அடிப்படையில் தமிழ் வடிவமைக்கப்பட்டதாகவும், அதே வேளையில் தாய்மொழி ஏமாற்று வேலை (cynical enough :)) என்றும் தருமராஜ் கிடைத்தார். அவருக்கு இதற்கான வேர்கள் அயோத்திதாசரிடம் செல்கிறது. என்னைப் பொறுத்தளவில் இது அ.தாசர் – தருமராஜின் முக்கியத்துவமாக நினைக்கிறேன். (TD also writes on varied things right..so this is in reference to his works on ADassar)

    அதாசரிடம் இன்றைய நிரூபணவாதத்தின் முறையியல் இல்லை. ஆனால் அவர் காலகட்டத்திற்கு பொருந்தும் முறைதானே. “என்மனார் புலவர்” என்பதுதான் அக்காலத்தின் வழக்கமாக இருந்திருக்கும். மேலும் அவர் சொல்வதன் பின்னுள்ள தரக்கங்களை சரி பார்க்கும் வாய்ப்பும் இல்லை என்றும் சொல்லி விடுகிறார் தருமராஜ். எனவே தாசர் சொல்வதனைத்தும் facts என்பதாக தருமராஜ் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். (புத்தகத்தை ஒருமுறை வேகமாக படித்தேன்..பொறுமையாகப் படிக்க வைத்திருக்கிறேன்). அவரை மீண்டும் மீண்டும் ஒரு ஞாபக காலத்திற்கும் மறதி காலத்திற்குமான பாலமாகவே பார்க்கிறார் என்றே நினைக்கிறேன். மொழி – சாதி – சமயம் எனும் மூன்று பண்பாட்டு தளங்களில் அயோத்திதாசரின் முறையியலிருந்து எடுத்துக்கொள்ள முனைவதே தருமராஜின் நோக்கமாகத் தோன்றுகிறது. (இந்த நோக்கம் தகவல்கள் பெரிதாக இல்லை என்பதால் clear route என்று ஆசுவாசம் அடைகிறது..இதனை earnest labor for factsக்கு எதிரானது என்று நினைக்கவில்லை.) அது இன்றைய தேக்கங்களிலிருந்து ஏதாவது விடுவிக்குமா என்றே முனைகிறார். ஏனெனில் தாசரின் முறையியல் அவருக்கு முன்பாக ஒரு 200 ஆண்டுகளின் அறிவு (தோராயமாக 16-17 நூ), அக்காலகட்டத்தின் சிந்தனைப்போக்குகள் கலந்திருக்கும். அவரும் ஒரு அறிவைத் தொகுக்கும் சமூகத்தை சார்ந்தவர். எனவே அவர் முக்கியமான தொடர்பு புள்ளியாகவே தெரிகிறார். நிச்சயம் வாசித்த வரையில் எனக்கு தாசரின் மொழி குறித்த பகுதிகள் முக்கியமானதாகப் பட்டது. இதனை facts அல்லது முடிவுகளாகப் பார்க்காமல் பார்க்கும் போது எனக்கு பெரிய தொந்தரவாகத் தோன்றவில்லை.

    இவ்வாறுதான் தாசர்-தருமராஜ் comboவை நான் அணுகுகிறேன்.

    Like

  3. விரிவான பதிலுக்கு நன்றி.

    இப்பேசுபொருட்களைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினால் ஒரு விலக்கமும், தமிழில் பேசினால் மிகையான ஒரு formalism வந்து ஒட்டிக்கொண்டு, சொல்லவருவதில் துல்லியம் (!) தவறிவிடுகிறது. சிந்திக்கும் மொழியில் எழுத முனைந்தால் நான் தமிழாங்கில மணிப்ரவாள ஒழுங்கீனத்தில் ஈடுபடவேண்டி வரும். ப்ளாக் உலகில் அதுகுறித்த லஜ்ஜை எல்லாம் இல்லை./இப்போது தான் ராஜா பகுதிக்கு வந்துவிட்டதாக படிப்பவர்கள் சொல்வார்கள்…../அது உண்மை தானே. இசை ரசனை(யும்) மேலோட்டமாக உள்ள எளியோமுக்கு விளங்கும் வகை ஸ்தூலமான ஒப்பீடுகள், அந்தப் புரிதல் தரும் thrill உங்கள் உரைகளின் விசேஷம் – குறிப்பாக 4,5ல். And we rub our palms together in gleeful anticipation.1/n

    Like

  4. இசை வரலாறு பற்றி நீங்கள் பேசியவை (இங்கு எழுதியவற்றை இன்னும் படிக்கவில்லை) உங்கள் பரந்துபட்ட வாசிப்பிலிருந்து மட்டுமல்ல, இசைச்சுவையனுபவத்திலிருந்தும் வருபவை is what makes it relatable .This isn’t a random compliment, it is relevant to the point I intend to make.

     உதாரணமாக ஒரு ருஷிய (?) கம்போஸரைக் குறிப்பிட்டு (sic),  சர்வாதிகாரச் சூழலில் செய்யப்பட்ட இசையில் தெரியும் awe ஒரு earnest conformismஆ அல்லது பகடியா, என்று இன்றும் விமர்சகர்களால் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை, என்று கூறியிருந்தீர்கள். வெறுமனே அப்படிச் சொல்லிச் செல்வது ஒரு தகவல். அறிய தகவல் தான். ஆனால் அதற்கு ஒரு இசைதுணுக்கை எடுத்து அங்கு வைத்தபோது, அந்த அபிப்ராயபேதத்தை (conformism v satire) புரிந்துகொண்டுவிட்டதுபோன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது. அத்துணுக்கை ரசித்தாராயும் திறன் இல்லாவிடினும், ஒரு second hand opinionஐ அப்படியே ஸ்வீகரிகத்துக் கொள்ளாமல், ஒரு independent validation செய்துகொண்டு நெருங்கிவிட்டது போலத் தோன்றுகிறது. அது தான் விஷயம்.To be clear, நிலையற்ற ஸ்வரங்கள் பற்றிய demonstration  தெளிவான ஒற்றை உண்மையை விளக்குவது. மேற்சொன்னது வேறு, ஒரு கருத்துக்கு வலுசேர்க்கும் சான்று. 

    That’s the value of backing up assertions, isn’t it. It is not that I have the wherewithal to assess them for myself. But the very proffering matters and insofar as one is able to relate to them somewhat, it fundamentally increases the persuasiveness of the point being made.

    2/n

    Like

  5. சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம்.

    ./ “ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ” இவை ஏழிசைக்குரிய என்ற போது எல்லாம் தலைகீழானமாதிரி இருந்தது தருமராஜ் திரும்பத் திரும்ப எழுதும் “ஞாபகம் மறதி” போன்ற ஒரு மனஓட்டம் கொஞ்ச நாள் இருந்தது /Exactly the point.

    There has been something in the yonder past that has slipped through the cracks. 
    We should not automatically lazily map it to SRGMPDN – இதுவரைக்கும் சரி

    ஆனால் அதற்குமேல் ‘வரலாற்றைக் கற்பனை செய்தல்’ என்ற நகர்வுக்கு எப்படிப் போவது?!’இவ்வாறு இருந்திருக்கலாம்’ என்ற அநுமானங்கள் மீது அநுமானங்களாக கட்டிக்கொண்டே போகும் முறையை எவ்வாறு ஏற்பது? Falsifiability என்பதே இல்லாத அணுகுமுறை அல்லவா இது.

     மனுசாஸ்திரம் பற்றிய ஒரு சமீபத்து இடுகையில் இப்படிச் சொல்கிறார் பேரா.தருமராஜ்:”நான் திரும்பத் திரும்ப சொல்லி வருவது போல, இதில் அறிவியல் சரித்தன்மைக்கு இடமே இல்லை.  இது உண்மையா, வரலாற்று பூர்வமானதா என்ற கேள்விகளெல்லாம் வெறும் மோஸ்தர் மட்டுமே! …(இந்த)  கற்பனை எவ்வளவு இன்றியமையாதது என்பதே இங்கு முக்கியம்.”

    இத்தகைய கருத்தை தனது நூலுலிலும், சமீபத்தில் அதைப் பற்றி நிகழ்ந்த கருத்தரங்கிலும் சொல்கிறார்.

    மேற்சொன்ன வரி என்னை தொந்தரவு செய்யும் ஒன்று.மோஸ்தர்! Surely he doesn’t mean insisting on accuracy is merely a fashion.  Perhaps he means, ‘we are deluding ourselves if we over-celebrate the framework of ‘proof’ and hesitate to engage in the counter-narrative itself’. 

    உதாரணமாக, ஜாதியற்ற-சமூகம் என்ற ஒரு கூட்டு நினைவு தமிழர்களுக்கு இருந்திருக்கிறது. ஓரளவு வளர்ந்துவிட்ட சமுதாயத்தில், கலாசாரம் சீர்மை கொண்ட சமுதாயம் அதிகார அடுக்குகள் இல்லாமல் சாத்தியப்பட்டிருக்குமா…என்று ஆராய்வது theory.

    அப்படி இயங்கியதா இல்லையா என்று ‘ஆவணங்கள்’ மூலம் வைத்து ஆராய்வது நிரூபணவாத அணுகுமுறை என்று வைத்துக்கொள்வோம் (அதற்கும் எது apriori நிலை என்பது theory தான் சொல்லவேண்டும்).

    ஆனால் பேரா.தருமராஜ் சொல்வது ‘ஜாதியற்ற சமூகம் என்ற ஒரு கூட்டு நினைவு இருந்திருக்கது என்பதே ஜாதியற்று தமிழ்சமுதாயம் இயங்கியிருக்கிறது எனக் கொள்ள அடிப்படை. அதை வைத்து ஜாதியற்ற ஒரு நாளையைப் பற்றிப் பேச முடியும். அந்த பயன் தான் முக்கியம், என்கிறார் (if I understand right).

    He says as much in the conference about his book (his youtube channel) இது எனக்கு மிக wrong-headedஆகவே தோன்றுகிறது. By the same logic, வேறொரு அரசியல் நிலைப்பாடு உள்ள ஆய்வாளர், அவரது ‘பயன்’ கருதி இவ்வுத்தியைக் கையில் எடுக்கொள்ளலாமே.

    3/n

    Like

  6. தருமராஜ் தன் நூலில் (சமீபத்தில் அதைப்பற்றிய இணைய கருத்தரங்கிலும்) மூவரை முன்வைக்கிறார்: அயோத்திதாசர், பாவாணர், ஆபிரகாம் பண்டிதர்.

    ஆபிரகாம் பண்டிதர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பாவாணரை வைத்து பேரா.தருமராஜ் சொல்வது கொஞ்சம் புரிகிறது. பாவாணரிடமும் எனக்கு இதே பிரச்சனை. முடிவுகள் நோக்கி shoehorn செய்யப்பட்ட philological assertionsஆகவே எனக்குத் தோன்றும்.  ஆனால் அக்காலத்தில் தமிழ் பற்றி இருந்த பொது consensusல் இருந்து, அது தனியாக இயங்கக் கூடியது என்ற நம்பிக்கை ஏற்பட்டதற்கு அவர் போன்றோர் பங்களிப்பு பெரிதாக இருந்திருக்கலாம். ஆனால் தனித்தனியாக படிக்கும்போது ‘எப்படி இதை சொல்கிறீர்கள்’ என்ற கேள்வி வராமல் ஒரு பக்கத்தைக்கூடத் தாண்ட முடிந்ததில்லை. 

    /அதாசரிடம் இன்றைய நிரூபணவாதத்தின் முறையியல் இல்லை. ஆனால் அவர் காலகட்டத்திற்கு பொருந்தும் முறைதானே. “என்மனார் புலவர்” என்பதுதான் அக்காலத்தின் வழக்கமாக இருந்திருக்கும். /

    I understand. U.Ve.Sa’s approach was more the exception – possibly the first departure – than the rule. We see him agonizing over who the deuce is the புலவர்/work being quoted in passing in one line by an உரையாசிரியர்.

    / தாசர் சொல்வதனைத்தும் facts என்பதாக தருமராஜ் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்./
    Yes. He emphasizes that they are richly imagined counter-narratives and to focus on enquiring into their bases in fact, is the wrong-approach which would miss the whole point. I hear him but I am unable to make that transition.

    In the same conference Stalin Rajangam starts off with saying, ‘much of history would have slipped through the crevices, so we will get a distorted picture if we emphasize on ‘recorded facts’ alone’. 

    That much is fair enough. However that does not make counter-narratives valid by the mere fact that they are asserted. So, without recourse to fact, what is the basis on which we accord importance to a counter-narrative?

    Perhaps some kind of overarching internal consistency (அகச்சான்று!) that slowly and grandly come up with the accretion of counter-narratives, that stitches together the entire picture and that, in itself, persuades one to invest in the assertions.

    n-1/n

    Like

  7. /நிச்சயம் வாசித்த வரையில் எனக்கு தாசரின் மொழி குறித்த பகுதிகள் முக்கியமானதாகப் பட்டது. / 

    மொழி பற்றி பொதுவாக எழுதிய பகுதிகளுக்கு நான் இன்னும் வரவில்லை. ஆனால் I was put off by many assertions (பறை, தீரா விடம் etc.). இதை வைத்துக்கொண்டு, மொழி பற்றிய அவரது அவதானங்களை சற்று சந்தேகத்துடன் நான் படித்தால், எனக்குத் திறப்புகள் ஏற்படுவது கடினமே.

    கொஞ்ச நாள் விட்டு மீண்டும் முயல வேண்டும். 

    n/n

    Like

Leave a comment